அபான முத்திரை
சிறப்புகள்:
இம்முத்திரை உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி புனிதமாக்கும் முத்திரையாக செயல்படுகிறது. மேலும், நமது உடலில் பூமி மற்றும் ஆகாயத்தின் சக்தியை சமன் செய்கிறது.
செய்முறை:
முதலில் தரையில் ஒரு யோகா பாய் விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அல்லது உங்கள் வசதிக்கேற்ப நாற்காலியிலும் அமரலாம்.
கண்களை மூடிக்கொள்வது சிறப்பு.
நமது மோதிர விரல் நுனியும், நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற இரண்டு விரல்களையும் நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இம்முத்திரைப் பயிற்சியில் விரல் நுனியில் அதிக அழுத்தம் கூடாது.
படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு கைகளையும், முழங்கால் மீது வைத்துக் கொண்டும் செய்யலாம்.
இம்முத்திரைப் பயிற்சியின் போது மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட வேண்டும்.
கால வரையறை:
இந்த முத்திரையை தினமும் 15 முதல் 45 நிமிடங்கள் செய்தால் நல்ல பலனைத் தரும்.
15 நிமிடங்கள் வீதம் மூன்று முறையாகவும் செய்யலாம்.
இம்முத்திரையை எந்த நேரமும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யலாம்.
பலன்கள்:
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
வாயுக்கோளாறுகளை சரி செய்யும்.
சிறுநீரகக் கற்கள் கரையும்.
பல் வலியை குணப்படுத்தும்.
அதிகப்படியான இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
கர்ப்பிணிகள் இம்முத்திரையை பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
அதிகப்படியான சிறுநீர் மற்றும் வியர்வை வெளியேறும்.
தீர்வுகள்:
கர்ப்பிணிகள் 8 மாதம் வரை இம்முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது.
வயிற்றுப்போக்கு, வாந்தி சமயங்களில் இந்த முத்திரை செய்யக் கூடாது.
SHARE WITH FRIENDS & FAMILY