தாமரை முத்திரை
சிறப்புகள்:
இந்த முத்திரை தூய்மையின் அடையாளமாக உள்ளது. இது அகக்கண்ணைத் திறக்கிறது, மேலும் இது பங்கஜ முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது.
செய்முறை:
முதலில் தரையில் ஒரு யோகா பாய் விரித்து பத்மாசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அல்லது உங்கள் வசதிக்கேற்ப நாற்காலியிலும் அமரலாம்.
கண்களை மூடிக்கொள்வது சிறப்பு.
மார்பு பகுதிக்கு நேராக இரண்டு உள்ளங்கைகளின் அடிப்பாகமும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும்படி வைக்க வேண்டும்.
பின்பு படத்தில் காட்டியபடி இரண்டு கைகளின் சிறு விரல்களையும், பெரு விரல்களையும் பக்கவாட்டில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற விரல்களை தாமரை இதழ்களைப் போல விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது முத்திரை தாமரை வடிவத்தில் இருக்கும்.
மார்புப் பகுதிக்கு நேராக வைத்துக் கொண்டு இந்த முத்திரைப் பயிற்சியை செய்ய வேண்டும்.
மார்புப் பகுதிக்கு நேராக வைத்துக் கொண்டு இந்த முத்திரைப் பயிற்சியை செய்ய வேண்டும்.
கால வரையறை:
இந்த முத்திரையை தினமும் 15 முதல் 45 நிமிடங்கள் செய்தால் நல்ல பலனைத் தரும்.
10 நிமிடங்கள் வீதம் மூன்று முறையாகவும் செய்யலாம்.
இம்முத்திரையை எந்த நேரமும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யலாம்.
பலன்கள்:
உடலை தூய்மைப்படுத்தும்.
மன அமைதி கிடைக்கும்.
காய்ச்சல் மற்றும் அல்சர் குணமாகும்.
மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி மன அமைதி மற்றும் மன மகிழ்ச்சி உண்டாகும்.
தீர்வுகள்:
காய்ச்சல், உடல் மற்றும் மன நிறைவு.
SHARE WITH FRIENDS & FAMILY