அபான வாயு முத்திரை
குறிப்பு:
இந்த முத்திரைப் பயிற்சியை செய்வதால் அபான முத்திரை மற்றும் வாயு முத்திரை ஆகிய இரண்டின் பலன் நமக்கு கிடைக்கும்.
சிறப்புகள்:
இந்த முத்திரையை "மிருத்யு சஞ்சீவினி" என்றும் கூறுவார்கள். இந்த முத்திரையை தொடர்ந்து பயிற்சி செய்தால் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தைத் தடுக்கும். அதாவது இது உயிர் காக்கும் முத்திரை ஆகும்.
செய்முறை:
முதலில் தரையில் ஒரு யோகா பாய் விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அல்லது உங்கள் வசதிக்கேற்ப நாற்காலியிலும் அமரலாம்.
கண்களை மூடிக்கொள்வது சிறப்பு.
நமது பெருவிரல் நுனியுடன், மோதிர விரல் நுனி, நடு விரல் நுனியை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆள்காட்டி விரலின் நுனியை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு கைகளையும், முழங்கால் மீது வைத்துக் கொண்டும் செய்யலாம்.
இம்முத்திரைப் பயிற்சியின் போது மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட வேண்டும்.
கால வரையறை:
இந்த முத்திரையை தினமும் 15 முதல் 45 நிமிடங்கள் செய்தால் நல்ல பலனைத் தரும்.
இம்முத்திரையை எந்த நேரமும், எந்த இடத்திலும் பயிற்சி செய்யலாம்.
பலன்கள்:
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இருதயம் பலப்படும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இருதயம் பலப்படும்.
தலைவலி, பல்வலி, வயிற்று வலி, முதுகு வலி, மூட்டு வலி, குதிகால் வலி ஆகியவற்றைப் போக்கும் வலி நிவாரணி ஆகும்.
தீர்வுகள்:
இருதயம், கண், மூட்டு வலி, தலைவலி, முதுகு வலி மற்றும் வாய்.
SHARE WITH FRIENDS & FAMILY